ADDED : பிப் 03, 2025 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை, : தமிழ்நாடு முற்போக்கு கிராம உதவியாளர் சங்கத்தின், செயற்குழு கூட்டம் நடந்தது.
இதில், கடந்தாண்டிற்கான, டி.ஏ., அரியர் தொகையை உடனடியாக வழங்கவும், 10 ஆண்டுகள் பணி நிறைவடைந்த கிராம உதவியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு நிலை ஊதிய உயர்வு, 3 சதவீதம் நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கிராம உதவியாளர்கள் பாரபட்ச இடமாற்றம், மாற்றுப்பணி வழங்கக்கூடாது. பணிப்பதிவேடு ஆன்லைன் பதிவேற்ற குளறுபடிகளை தடுக்கவும், உடுமலை தாலுகாவிலுள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நிர்வாகிகள் புனிதா, பிரேமா செல்வி, பாலமுருகன், நாகராஜ், முத்துவேல் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

