/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீரில் சுவையில்லை புலம்பும் கிராம மக்கள்
/
குடிநீரில் சுவையில்லை புலம்பும் கிராம மக்கள்
ADDED : மார் 14, 2024 12:08 AM
பல்லடம் : குடிநீர் என்ற பெயரில், உப்புத் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக, பல்லடம் வட்டார கிராம மக்கள் புலம்பி வருகின்றனர்.
இது குறித்து பல்லடம் வட்டார பொதுமக்கள் சிலர் கூறியதாவது: கோடை காலம் துவங்கும் முன்னதாகவே, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான ஊராட்சிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை. குடிநீர் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதாகவும் பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.
இதற்கிடையே, பெரும்பாலான ஊராட்சிகளில் குடிநீர் என்ற பெயரில் உப்புத் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இது, சமைப்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதுடன், உடல் உபாதைகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வசதி உள்ளவர்கள், ஆர்.ஓ., மற்றும் குடிநீரை விலைக்கு வாங்கியும் பயன்படுத்துகின்றனர்.
சராசரி நிலையில் உள்ள குடும்பங்கள், பொது விநியோக குடிநீரை தான் பயன்படுத்துகின்றனர். குடிநீர் என்ற பெயரில் உப்பு நீர் விநியோகிப்பது கவலை அளிக்கிறது. இதுகுறித்து அதிகாரிகள் யாரும் ஆய்வும் செய்வதில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

