/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இடியும் நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்துடன் கிராம மக்கள்
/
இடியும் நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்துடன் கிராம மக்கள்
இடியும் நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்துடன் கிராம மக்கள்
இடியும் நிலையில் குடிநீர் தொட்டி அச்சத்துடன் கிராம மக்கள்
ADDED : ஜூன் 01, 2025 11:17 PM

உடுமலை : 'இடிந்து விழும் மேல் நிலைத்தொட்டியால், அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது,' என சோமவாரப்பட்டி ஆர்.ஜி.ஆர்., நகர் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குடியிருப்பு ஆர்.ஜி.ஆர்., நகர். அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த, 1999-2000 ம் ஆண்டில், 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டது.
குடிநீர் வடிகால் வாரியத்தால் கட்டப்பட்ட இந்த மேல்நிலைத்தொட்டி போதிய பராமரிப்பு இல்லாமல், இடிந்து விழத்துவங்கியுள்ளது.
தொட்டியின் துாண்களில் கான்கிரீட் விரிசல் விட்டு, உதிர்ந்து வருகிறது; குடிநீர் தேக்கப்படும் தொட்டியும் வலுவிழந்து எந்நேரத்திலும், முழுவதுமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது.
குடியிருப்பின் அருகிலேயே மேல்நிலைத்தொட்டி உள்ளதால், அப்பகுதி மக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது. அசம்பாவிதம் நடைபெறும் முன் மேல்நிலைத்தொட்டியை இடித்து அகற்ற சோமவாரப்பட்டி ஊராட்சி மற்றும் குடிமங்கலம் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.