/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி கிராம மக்கள் வலியுறுத்தல்
/
சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி கிராம மக்கள் வலியுறுத்தல்
சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி கிராம மக்கள் வலியுறுத்தல்
சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : மே 23, 2025 12:34 AM
உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதி சுகாதார வளாகங்களில் தண்ணீர் வசதி இல்லாததால், திறந்த வெளிக்கழிப்பிட நிலைக்கு தீர்வு இல்லாமல் உள்ளது.
உடுமலை ஒன்றியத்துக்குப்பட்ட, 38 ஊராட்சிகளிலும் உள்ள கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. துாய்மை பாரத இயக்கத்தின் கீழ் தான் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுகிறது.
கிராமங்களில் முழுமையான சுகாதாரத்தை மேம்படுத்துவது தான், இத்திட்டத்தின் நோக்கமாக உள்ளது. குறிப்பாக, திறந்த வெளிக்கழிப்பிட நிலையை முற்றிலுமாக நீக்குவதும் ஒன்றாக இருந்தது.
இதற்கென தனிநபர் இல்லக்கழிப்பிட திட்டமும் செயல்படுத்தப்பட்டு, வீடுதோறும் கழிவறைகளும் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான மானியத்தொகையாக, 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுதவிர, சுகாதார வளாகங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
ஆனால், கிராமங்களில் தண்ணீர் வசதி பிரச்னையால், கழிப்பறைகள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கான சுகாதார வளாகங்களிலும், தண்ணீர் வசதி பராமரிக்கப்படுவதில்லை.
தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால், இப்பிரச்னைகள் குறித்து ஊராட்சி நிர்வாகங்களும் கண்டுகொள்ளாமல் உள்ளது. சுகாதார வளாகங்கள் இவ்வாறு பயன்படுத்த முடியாமல் போவதால், திறந்த வெளிக்கழிப்பிட நிலைக்கு தீர்வு இல்லாமல் உள்ளது.
கிராமப்புற சுகாதார வளாகங்களில், போதுமான அளவு தண்ணீர் வசதியை ஏற்படுத்துவதற்கு, ஒன்றிய நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.