/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ப்பு நாய்களுக்கு முறையாக ஊசி போடுங்க; கிராம மக்கள் வலியுறுத்தல்
/
வளர்ப்பு நாய்களுக்கு முறையாக ஊசி போடுங்க; கிராம மக்கள் வலியுறுத்தல்
வளர்ப்பு நாய்களுக்கு முறையாக ஊசி போடுங்க; கிராம மக்கள் வலியுறுத்தல்
வளர்ப்பு நாய்களுக்கு முறையாக ஊசி போடுங்க; கிராம மக்கள் வலியுறுத்தல்
ADDED : ஏப் 29, 2025 09:22 PM
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதி ஊராட்சிகளில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடுமலை ஒன்றியத்துக்குட்பட்ட, 38 ஊராட்சிகளில் தெருநாய்கள் பொதுமக்களை அச்சுறுத்துவது தொடர்ந்து நடக்கிறது. குறிப்பாக, நகருக்கு அருகிலுள்ள ஊராட்சிகளில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால், பலரும் காலை, மாலை நேரங்களில் ரோட்டில் நடைபயிற்சி செய்வதையே தவிர்த்து விட்டனர். குழந்தைகளையும், வாகன ஓட்டுனர்களைம் துரத்திச்சென்று அவர்களை விபத்துக்குள்ளாவதும் தொடர்ந்து நடக்கிறது.
பொதுமக்களும் பொறுமை இழந்து, வீதிநாய்களை தாக்கும் நிலைக்கு சென்றுகின்றனர். இதுதவிர, சில பகுதிகளில் பிரச்னை வேறுவிதமாக உள்ளது.
வீதியில் சுற்றும் நாய்கள் வீட்டு நாய்களையும் தாக்குவதால், அவையும் வளர்ப்போரை அச்சுறுத்துவதும், தாக்கவும் செய்கின்றன.
ஊராட்சி நிர்வாகங்கள், இப்பிரச்னையில் தனிகவனம் செலுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கிராம மக்கள் கூறியதாவது: தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். இதுதவிர, வீட்டில் வளர்க்கப்படும் நாய்களை, வளர்ப்போர் இல்லாமல் வீதியில் சுற்றுவதை ஊராட்சி நிர்வாகம்தான் கட்டுபடுத்த வேண்டும்.
இதனால்தான் அதிகமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. அவை கால்நடைகளையும் தாக்குகின்றன. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, முறையாக ஊசிபோட்டிருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

