/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருளில் தவிக்கும் கிராமங்கள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
/
இருளில் தவிக்கும் கிராமங்கள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
இருளில் தவிக்கும் கிராமங்கள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
இருளில் தவிக்கும் கிராமங்கள் நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
ADDED : செப் 05, 2025 09:38 PM
உடுமலை,; உடுமலை ஒன்றிய கிராமப்பகுதிகளில், தெருவிளக்குகளை சீரமைக்க, உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை, ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. கிராமப்பகுதிகளின் அடிப்படை தேவைகளில் தெருவிளக்குகளும் ஒன்றாக உள்ளன. மாலை நேரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியில் செல்வதற்கும், வாகன ஓட்டுனர்கள் செல்வதற்கும், தெருவிளக்குகள் அவசிய தேவையாக உள்ளது. பல கிராமப்பகுதிகளில் தெருவிளக்குகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. சில கிராமப்பகுதிகளுக்கு சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த விளக்குகளும், பழுதடைந்த நிலையில் இருப்பதால், கிராமங்கள் மாலை நேரங்களில் இருளில் மூழ்கி உள்ளன. கிராமங்களின் அடிப்படை தேவையாக உள்ள இப்பிரச்னைக்கு, உள்ளாட்சி நிர்வாகத்தினர் முக்கியத்துவம் அளித்து, கிராமங்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.