ADDED : ஆக 04, 2025 08:04 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை பஸ் ஸ்டாண்டுக்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டில், போதிய இடவசதி இல்லாததால், பஸ்கள் திரும்பவும், பயணியர் நிற்பதற்கும் திணற வேண்டியுள்ளது.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்டுக்குள், இருசக்கர வாகன ஓட்டுநர்கள், தாறுமாறாக வாகனங்களை ஓ ட்டிச்செல்கின்றனர். பயணியர் நிற்கும் இடத்திலும், நடந்து செல்லும் பாதையிலும், வேகமாக செல்வதுடன், ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி சென்று விடுகின்றனர்.
இதனால், பயணியர் பாதிக்கின்றனர். விதிகளை மீறி, பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

