ADDED : நவ 24, 2025 06:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சேவூர், நம்பியூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் வாரச்சந்தை வளாகம் உள்ளது. திங்கள்கிழமை சந்தை கூடுகிறது.
ஏராளமான மக்கள், சந்தைக்கு வந்து பொருட்களை வாங்கிச்செல்கின்றனர்.''சந்தை நாளில் மட்டும் இங்கு கடைகள் அமைக்க வேண்டும்; நிரந்தர கடைகள் இருக்கக்கூடாது; கட்டுமானத்தில் மாற்றம் கூடாது'' என்பவை உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் உள்ளன.
விதிமுறை மீறி, சந்தை வளாகத்தின் உட்புறத்தில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் நபர் ஒருவர் அங்கு நிரந்தர ெஷட் அமைத்து விட்டார். சந்தை நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும், இக்கடை வெளிப்புறமாக ஒரு வழி அமைத்து செயல்படுகிறது. இதற்காக சந்தை வளாகத்தின் சுற்றுச் சுவரை இடித்து அவர் பயன்படுத்தி வருகிறார்.

