/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாணவியிடம் அத்துமீறல்: அரசு பள்ளி ஆசிரியர் கைது
/
மாணவியிடம் அத்துமீறல்: அரசு பள்ளி ஆசிரியர் கைது
ADDED : ஜன 21, 2025 07:17 AM

திருப்பூர்; திருப்பூர் அருகே பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அரசு பள்ளி அறிவியல் ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே அரசு உயர் நிலைப்பள்ளியில் நுாற்றுக்கணக்கானோர் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக சிவக்குமார், 54 என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், ஆறாம் வகுப்பு மாணவி, ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள், காங்கயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட மாணவி உட்பட மேலும் சில மாணவியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, ஆசிரியர் சிவக்குமார் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.