/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர்களுக்கு வன்முறை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
/
ஆசிரியர்களுக்கு வன்முறை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
ஆசிரியர்களுக்கு வன்முறை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
ஆசிரியர்களுக்கு வன்முறை தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி
ADDED : ஜன 20, 2025 10:52 PM
உடுமலை; அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு சார்ந்து மாவட்ட அளவிலான பயிற்சி இன்று துவங்குகிறது.
இன்றைய சூழலில் பள்ளி செல்லும் குழந்தைகள், பல்வேறு சூழல்களில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
இத்தகைய பிரச்னைகளுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை குறித்தும், அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதன் முதற்கட்டமாக மாவட்ட அளவில் கருத்தாளர்களுக்கு பயிற்சி இன்று (21ம் தேதி) மற்றும் நாளை நடக்கிறது.
கருத்தாளர்களாக ஒவ்வொரு வட்டாரத்திலும் அரசு உயர்நிலை பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் தலா ஒருவர் வீதமும், ஆசிரியர் பயிற்றுனர்களும் பங்கேற்கின்றனர்.
அதைத்தொடர்ந்து வட்டார அளவில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.