ADDED : டிச 23, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் வெங்கடேஸ்வரா நகர், ரோஜா மகாலில் நேற்று, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கிளை நிர்வாகிகள், மாவட்ட பேச்சாளர்களுக்கு 'தர்பியா' என்ற நல்லொழுக்க பயிற்சி முகாம் நடந்தது.
மாவட்ட செயலாளர் யாசர் அரபாத் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் செங்கோட்டை பைசல், மாநில பேச்சாளர் அப்துல் ரகுமான் பிர்தவ்ஸி ஆகியோர் பேசினர்.மாவட்டத் தலைவர் நுார்தீன், பொருளாளர் சிராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

