/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா அகாடமி நுாறு சதவீதம் தேர்ச்சி
/
விவேகானந்தா அகாடமி நுாறு சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 14, 2025 11:26 PM

திருப்பூர்,; காங்கயம், காடையூரில் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சி.பி.எஸ்.இ., பொது தேர்வில் தொடர்ச்சியாக, பிளஸ் 2 வில், 11வது முறையாகவும், பத்தாம் வகுப்பில், 13வது முறையாகவும் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
வணிகவியல் பிரிவில், கோதில் மொழி, 482 மதிப்பெண் பெற்று முதலிடம், அறிவியல் பிரிவில் தர்சன், 473 பெற்று பள்ளியில் முதலிடமும், நவநீதன், 472 பெற்று இரண்டாமிடம் பிடித்தனர்.
ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் பொருளாதார பாடங்களில், 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், 90 சதவீதம் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பில் தேர்வெழுதிய, 95 மாணவர்களில் மிதுன், ரோஹித், தருண் கார்த்திக், ஆத்மிகா ஷிவாணி ஆகிய, ஐந்து பேர், 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றும், 61 மாணவர்கள், 400க்கும் மேல் மதிப்பெண் பெற்றும், பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மேலும், ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில், 65க்கும் மேற்பட்ட மாணவர்கள், 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றுள்ளனர்.
மேலும், 88 க்கும் மேற்பட்ட மாணவர்கள், 90 சதவீத்துக்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாக தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் சுப்ர மணியம், பொருளாளர் ராஜன் மற்றும் பள்ளி முதல்வர் பத்மநாபன் ஆகியோர் பாராட்டினர்.