/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா அகாடமி தடகளத்தில் சாதனை
/
விவேகானந்தா அகாடமி தடகளத்தில் சாதனை
ADDED : நவ 08, 2025 12:57 AM

காங்கயம்: காங்கயம், விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள், 9வது கோவை சகோதயா தடகள போட்டியில் சாதனை படைத்தனர்.
கோவை சகோதயா சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் கூட்டமைப்பின் ஒன்பதாம் ஆண்டு சிறுவர், சிறுமியர் (8 மற்றும் 10 வயது பிரிவு) மற்றும் மாணவ, மாணவியருக்கான (12, 14, 17, 19 வயது பிரிவு) தடகளப்போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில், காங்கயம் விவேகானந்தா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் பங்கேற்று ஒட்டுமொத்த சாம்பியன் இரண்டாம் இடத்தை வென்றனர்.
மேலும் பள்ளியில் இருந்து, 80 மாணவர்கள் பங்கேற்று, 34 தங்கம், 32 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

