/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட மாணவியர் கபடி அரசு பள்ளி அணி வெற்றி
/
மாவட்ட மாணவியர் கபடி அரசு பள்ளி அணி வெற்றி
ADDED : நவ 08, 2025 12:57 AM
திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட மாணவியர் கபடி போட்டி, அலகுமலை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்டம் முழுதும் ஏழு குறுமையங்களில் இருந்து, ஏழு மாணவியர் கபடி அணிகள், 84 வீராங்கனையர் பங்கேற்றனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், மாவட்ட கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம், அலகுமலை வித்யாலயா பள்ளியின் செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர். கே.எஸ்.சி. அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் ஆனந்த், கருப்பகவுண்டம்பாளையம் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முருகன் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.
மாணவியர், 14 வயது பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி அணி, 17 - 10 என்ற புள்ளிக்கணக்கில் முதலிடம் பெற்றது; சர்க்கார் பெரியபாளையம் அரசுஉயர்நிலைப்பள்ளி அணி இரண்டாமிடம். 17 வயது பிரிவில், வி.கே.,அரசு மேல்நிலைப்பள்ளி, அய்யங்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 26 - 24 என்ற புள்ளிக்கணக்கில் முதலிடம் பெற்றது; மூலனுார், பாரதி மெட்ரிக் பள்ளி அணி இரண்டாமிடம்.
பத்தொன்பது வயது பிரிவில், அரசு மேல்நிலைப்பள்ளி அணி, தளவாய்ப்பட்டினம் அணி, 30 - 11 என்றபுள்ளிக்கணக்கில் முதலிடமும், குன்னத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகள் மாநில கபடிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

