/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
/
விவேகானந்தா வித்யாலயா பள்ளி ஆண்டு விழா
ADDED : ஆக 17, 2025 11:52 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், கே.செட்டிபாளையம், விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், மழலையர் முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கான பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஒருங்கிணைப்பாளர் செல்வி வரவேற்றார். விவேகானந்தா சேவா அறக்கட்டளை உபதலைவர் ஞானபூபதி தலைமை தாங்கினார். உபதலைவர் தியாகராஜன் முன்னிலை வகித்தார்.
இண்டிகோ ஏர்லைன்ஸ் கேப்டன் ராமலிங்கம், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினார். ஆண்டறிக்கையை முதல்வர் சின்னையா வாசித்தார். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. அறங்காவலர் குமார் நன்றி கூறினார்.