/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வ.உ.சி. பிறந்த நாள் மலர் துாவி மரியாதை
/
வ.உ.சி. பிறந்த நாள் மலர் துாவி மரியாதை
ADDED : செப் 05, 2025 11:37 PM

அனுப்பர்பாளையம்:
-சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி.யின், 154வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாநகராட்சி, 32வது வார்டு, கருணாகர புரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், வ.உ.சி. படம் வைத்து அலங்கரித்து, மலர்துாவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சிக்கு, சூர்யா செந்தில் தலைமை வகித்தார். மாநகராட்சி 2வது மண்டல தலைவர் கோவிந்தராஜ், அன்னதானத்தை துவங்கி வைத்தார்.
n அதே பகுதியில் உள்ள ஆர்.எஸ்.புரம், சஞ்சய் நகரில் நடந்த நிகழ்ச்சியில் சுதேசி இளைஞர் பேரவை மற்றும் அகில இந்திய வ.உ.சி. பேரவை நிர்வாகிகள் ரமேஷ், அருண், ஈஸ்வரன், கவுதம், பவுன் ராஜ், சுரேஷ், கந்தசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.