/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபால், பீச் வாலிபால்; 'குமுதா' அசத்தல்
/
வாலிபால், பீச் வாலிபால்; 'குமுதா' அசத்தல்
ADDED : பிப் 15, 2024 12:01 AM

திருப்பூர் : தேசிய, மாநில வாலிபால், பீச் வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற குமுதா பள்ளியின் வீரர், வீராங்கனைகளை மாவட்ட எஸ்.பி., ஜவஹர் பாராட்டினர்.
இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஐ.,) சார்பில், இப்பள்ளி பிளஸ் 2 மாணவி ரஞ்சிதா, திருச்சியில் நடந்த, 17 வயது தேசிய வாலிபால் அணி தேர்வில் பங்கேற்று, வெள்ளி வென்றார்.
ஒடிசா, புவனேஸ்வரில் நடந்த, 14 வயது மாணவியர் தேசிய வாலிபால் போட்டியில், ஒன்பதாம் வகுப்பு மாணவி, ரிதன்யா வெண்கலம் கைப்பற்றினார்.
பள்ளி கல்வித்துறை சார்பில், சென்னையில், 64 வது குடியரசு தின, பாரதியார் தின மாணவியர் பீச் வாலிபால் போட்டி நடந்தது. இதில், 14 மற்றும், 19 வயது இரண்டு பிரிவுகளில், இப்பள்ளி மாணவியர் தங்கம் வென்று அசத்தியுள்ளனர். புதுக்கோட்டையில் நடந்த மாணவர் பீச் வாலிபால் போட்டியில், 14 வயது பிரிவில் மாணவர் அணி வெள்ளி வென்றது.
வீரர், வீராங்கனைகளை ஈரோடு எஸ்.பி., ஜவஹர், முதன்மை கல்வி அலுவலர் சம்பத், மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் சாலமன், மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் செங்குட்டுவன் உள்ளிட்டோர் பாராட்டினர்.
குமுதா பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டுத்துறை இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி உள்ளிட்டோரும் பாராட்டினர்.

