/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம்: விழிப்புணர்வு ஊர்வலம்
/
வாக்காளர் பட்டியல் திருத்தம்: விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்: விழிப்புணர்வு ஊர்வலம்
வாக்காளர் பட்டியல் திருத்தம்: விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : நவ 12, 2025 11:40 PM

திருப்பூர்: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 2026 குறித்த விழிப்புணர்வு ஊர்வலம், திருப்பூர், பல்லடம் ரோட்டிலுள்ள எல்.ஆர்.ஜி. கல்லுாரியில் நேற்று நடைபெற்றது.
கலெக்டர் மனிஷ் நாரணவரே, கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரியில் துவங்கிய ஊர்வலம், தமிழ்நாடு தியேட்டர் பகுதி வரை சென்று திரும்பியது. மகளிர் திட்டம் சார்பில், கல்லுாரி வளாகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. வரும் 2026 ஜன. 1ம் தேதியை தகுதிநாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்றுவருகின்றன.
பி.எல்.ஓ.,க்கள், வாக்காளர்களின் வீடு வீடாக படிவம் வழங்கிவருகின்றனர். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், டிச. 4 ம் தேதிக்குள் திரும்ப பெறப்படும். பொதுமக்கள், படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து, கையொப்பத்துடன் பி.எல்.ஓ.,க்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
பூர்த்தி செய்து பெறப்படும் படிவங்களில் உள்ள வாக்காளர்களின் பெயர் மட்டுமே, வரைவு பட்டியலில் சேர்க்கப்படும் என, தெரிவிக்கப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) புஷ்பாதேவி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.

