/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கூட்டுறவு விளையாட்டு போட்டி: அலுவலர் - பணியாளர் உற்சாகம்
/
கூட்டுறவு விளையாட்டு போட்டி: அலுவலர் - பணியாளர் உற்சாகம்
கூட்டுறவு விளையாட்டு போட்டி: அலுவலர் - பணியாளர் உற்சாகம்
கூட்டுறவு விளையாட்டு போட்டி: அலுவலர் - பணியாளர் உற்சாகம்
ADDED : நவ 12, 2025 11:39 PM

திருப்பூர்: கூட்டுறவு வார விழாவையொட்டி, கூட்டுறவு அலுவலர், பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டி நடந்தது.
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் அனைத்திந்திய கூட்டுறவுத்துறை சார்பில், திருப்பூர் கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நேற்று விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. வாலிபால், த்ரோபால், கபடி, பேட்மின்டன் உள்ளிட்ட பல போட்டிகள் நடந்தது. ஆண்கள் பிரிவு வாலிபால் போட்டியில் வளர்மதி சங்க அணி முதலிடம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அணி இரண்டாமிடம் பெற்றது. ஆண்கள் கபடி போட்டியில் தொடக்க வெளாண்மை கூட்டுறவு கடன் சங்க அணி முதலிடம், வளர்மதி சங்க அணி இரண்டாமிடம் பெற்றது.
அலுவலர்க்கான பெண்கள் ஒற்றை பேட்மின்டன் போட்டியில் காவியா முதலிடம், சவுமியா இரண்டாமிடம், மதுராம்பிகா மூன்றாமிடம் பெற்றனர். பணியாளர்களுக்கான பேட்மின்டன் போட்டியில் பார்வதி தேவி முதலிடம், மோகனசுந்தரி இரண்டாமிடம் பெற்றனர்.