ADDED : பிப் 16, 2026 05:40 AM
அ நிறம் | அளவு
அனுப்பர்பாளையம்: திருப்பூர் பாத்திர தொழிலாளர் சம்பள ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 31 உடன் நிறைவு பெற்றது. புதிய சம்பள ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தைக்கு வராமல், எவர் சில்வர், பித்தளை மற்றும் செம்பு பாத்திர உற்பத்தியாளர்கள் காலம் கடத்துவதாக, தொழிற்சங்க கூட்டு கமிட்டியினர் தொழிலாளர் துறையில் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து, தொழிற்சங்க கூட்டு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உற்பத்தியாளர் சங்கத்தினர் என இரு தரப்பினரையும் இன்று பேச்சு வார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இன்று குமார் நகரில் உள்ள மாவட்ட தொழிலாளர் துறை அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு உதவி ஆணையர் பிரேமா தலைமையில் பேச்சுவார்த்தை நடக்கிறது.
