/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்; வேலை உறுதி தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவை
/
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்; வேலை உறுதி தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவை
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்; வேலை உறுதி தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவை
ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம்; வேலை உறுதி தொழிலாளர்களுக்கு ஊதியம் நிலுவை
ADDED : மார் 21, 2025 10:30 PM

உடுமலை; உடுமலை ஒன்றிய அலுவலகம் முன், 4 மாத ஊதியத்தை வழங்க கோரி, ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு, நிலுவை வைத்துள்ள, 4 மாத ஊதியத்தை உடனடியாக வழங்கவும், வேலை, அட்டை உள்ளவர்கள் அனைவருக்கும் வேலை வழங்கவும், நகர்ப்புற வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு உரிய நிதியை விடுவிக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், உடுமலை ஒன்றிய அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் ரங்கராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பஞ்சலிங்கம், ஒன்றிய செயலாளர் கனகராஜ், சி.ஐ.டி.யு., மாவட்ட துணை செயலாளர் ஜெகதீஷ், விவசாய சங்கம் ஒன்றியத்தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட, 550க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
நகராட்சி வளாகத்திலுள்ள ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நீடித்த நிலையில், பி.டி.ஓ.,ரமேஷ்,''10 நாட்களில் ஊதியம் வழங்கப்படும், என உறுதியளித்தார். இதனையடுத்து, தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.
குடிமங்கலம்
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்க கோரி, குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் செய்தனர். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் ஒன்றிய துணை தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் வல்பூரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
விவசாயிகள் சங்க நிர்வாகி தங்கவடிவேல், மாதர் சங்க நிர்வாகி சசிகலா உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.