ADDED : ஜூலை 09, 2025 12:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்; பல்லடம் ரோட்டரி சங்கம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் சார்பில், 2.75 லட்சம் ரூபாய் செலவில், நோயாளிகள் காத்திருப்புக் கூடம் அமைக்கப்படுகிறது.
இதற்கான பூமி பூஜை நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் அபுதாகிர், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பல்லடம் ராம் நெய் உரிமையாளர் கண்ணையன், ரோட்டரி சங்க பொருளாளர் பாபு, பானு ஜுவல்லரி விக்னேஷ், பிரீமியர் பைன்ஸ் கார்த்திக் ஆகியோர், காத்திருப்பு கூடம் அமைக்க தங்களது பங்களிப்பை செலுத்தினர். சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், தனுஷ் கோகுல் பங்கேற்றனர்.