/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ராணுவ வீரராக ஆசையா? விண்ணப்பிக்க அழைப்பு
/
ராணுவ வீரராக ஆசையா? விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : மார் 17, 2024 11:57 PM
உடுமலை;இந்திய ராணுவத்தின், 2024-25ம் ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு பொது நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களை, ஆன்லைனில் வரும், 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அன்றைய தேதி முதல், இணையதளத்தில் பொதுத்தேர்வு துவங்கி நடைபெற உள்ளது. திருப்பூர், சேலம், நாமக்கல், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச்சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள், www.joinindianarmy.nic.in என்கிற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள், கலெக்டர் அலுவலகத்தில், அறை எண்: 523ல் இயங்கும் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் அணுகி, கூடுதல் விபரங்கள் பெறலாம். இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

