ADDED : அக் 16, 2025 11:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: சிறுபான்மையினர் நலத் திட்டங்கள் குறித்த சிறப்புக் குழு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு வக்ப் வாரிய உறுப்பினர் சுபேர்கான் தலைமை வகித்து பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், சிறுபான்மையினர் நலன் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சிறுபான்மையின மக்களுக்கு அனைத்து அரசு திட்டங்கள் சார்ந்த உதவிகளும் கிடைக்க, சம்பந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணிபுரியவேண்டும்,'' என்றார்.
மாவட்ட டவுன் ஹாஜி முகமது தாஜீர், கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் பிரபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கல்பனா மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.