ADDED : அக் 16, 2025 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: பொங்கலுார் ஒன்றியம், காட்டூர் ஊராட்சி, தொட்டிபாளையம் பிரிவு அருகே நிழற்குடை கட்டடம் உள்ளது.
அதனை 'குடி'மகன்கள் முழுமையாக ஆக்கிரமித்து நிழற்குடையை திறந்த வெளி மதுக்கூடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், நிழற்குடை முழுக்க காலி மது பாட்டில்கள் ஆங்காங்கே நிறைந்து கிடக்கிறது. மழைக்காலம் துவங்கி உள்ளதால், பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள் நிழற்குடையை பயன்படுத்த இயலாத நிலை உள்ளது.