/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.ஐ. தேர்வு எழுதுவோருக்கு 22ல் பயிற்சி வகுப்பு துவக்கம்
/
எஸ்.ஐ. தேர்வு எழுதுவோருக்கு 22ல் பயிற்சி வகுப்பு துவக்கம்
எஸ்.ஐ. தேர்வு எழுதுவோருக்கு 22ல் பயிற்சி வகுப்பு துவக்கம்
எஸ்.ஐ. தேர்வு எழுதுவோருக்கு 22ல் பயிற்சி வகுப்பு துவக்கம்
ADDED : அக் 16, 2025 11:25 PM
திருப்பூர்: கலெக்டர் மனிஷ் நாரணவரே அறிக்கை:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, 1,299 போலீஸ் எஸ்.ஐ., காலி பணியிடங்கள்;, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான 53 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான தேர்வு, வரும் டிச. 21ம் தேதி நடைபெற உள்ளது.
போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கான இலவச மாதிரி வகுப்புகள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வரும், 22ம் தேதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெற உள்ளது. மதியம், 2:00 முதல் மாலை, 4:30 மணி வரை வகுப்புகள் நடைபெறும். மாவட்டத்தில், எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பித்து, தேர்வு எழுத உள்ள மாணவர்கள், இப்பயிற்சியில் இணைந்து பயன்பெறலாம். கூடுதல் விவரங்களுக்கு, 0421 - 2999152, 94990 55944 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.