/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீணான பின்னல் துணி கழிவு அழகு ஆடையாக உருமாற்றம்
/
வீணான பின்னல் துணி கழிவு அழகு ஆடையாக உருமாற்றம்
ADDED : ஜன 12, 2025 11:43 PM
மறுசுழற்சியுடன் கூடிய மறுபயன்பாட்டில் திருப்பூர் முன்னோடி 'கிளஸ்டர்' என்ற பாராட்டை பெற்றுள்ளது.
சர்வதேச அளவில், வளர்ச்சி பெற்ற நாடுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அனைத்து நாடுகளும் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. இயற்கை பாதிக்கும் என்பதால், 'கார்பன்' வெளியேறுவதை கட்டுப்படுத்தி, அனைத்து வகை உற்பத்தியும் நடக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கின்றன. மறுசுழற்சி தொழில்நுட்பத்தை திருப்பூர் வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கிறது.
பின்னலாடை நிறுவனங்களில், ஆடை தைக்க வெட்டப்படும் துணியில் (கட்டிங் வேஸ்ட்) இருந்து, 12 சதவீதம் வரை கழிவுகள் உருவாகின்றன. அவை, எடை கணக்கில் விற்கப்பட்டது; பெரும்பாலான 'கட்டிங் வேஸ்ட்'கள், இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட்டது.
கடந்த பல மாதங்களாக, இவை ஆடைகளாக உருமாற்றம் பெற்று, பலரது வரவேற்பை பெற்றுள்ளது.