/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களில் நீர் இருப்பு; அமைச்சர்கள் ஆய்வு
/
குளங்களில் நீர் இருப்பு; அமைச்சர்கள் ஆய்வு
ADDED : அக் 26, 2024 11:01 PM
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில், மக்கள் சேவை முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கைகள், குளம் குட்டைகள் மற்றும் நீர் வழித்தடங்களின் நீர்மேலாண்மை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், ஆய்வு நடத்தினர். மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள, 1,023 குளம், குட்டைகள் தண்ணீர் இருப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
மழைநீர் சேகரிப்பு, ஓடைகள் பராமரிப்பு, ஊராட்சி அரசு கட்டடங்கள் நிலவரம், பராமரிப்பு செய்ய வேண்டிய கட்டடங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மக்களுடன் முதல்வர் திட்டம், மக்கள் சேவை முகாம் வாயிலாக மக்களிடம் பெற்ற மனுக்கள் மீது அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அமைச்சர்கள் அறிவுறுத்தினர்.