/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுவாச காற்றுக்கு இணையானது தண்ணீர்! இன்று உலக தண்ணீர் தினம்
/
சுவாச காற்றுக்கு இணையானது தண்ணீர்! இன்று உலக தண்ணீர் தினம்
சுவாச காற்றுக்கு இணையானது தண்ணீர்! இன்று உலக தண்ணீர் தினம்
சுவாச காற்றுக்கு இணையானது தண்ணீர்! இன்று உலக தண்ணீர் தினம்
ADDED : மார் 21, 2025 11:55 PM

''மூன்றாவது உலகப்போர் ஒன்று வந்தால், அது தண்ணீருக்காக தான் இருக்கும்'' என எச்சரிக்கின்றனர், விஞ்ஞானிகள். மனிதன், தாயின் கருவறையில் உருவாக துவங்குவது முதல், இறப்பு வரை, நீரின் தேவை என்பது, சுவாசக்காற்றுக்கு இணையானதாகவே இருக்கிறது.
அந்த வகையில், தண்ணீரின் முக்கியத்துவம், அவற்றை சேமிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் நோக்கில், ஆண்டு தோறும், மார்ச் 22ல், 'உலக தண்ணீர் நாள்' கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்து முன்வைக்கப்படும் நிலையில், இந்தாண்டு 'பனிப்படிவங்களை பாதுகாப்போம்' என்ற கருத்தை முன்வைத்திருக்கிறது, ஐ.நா., சபை.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ கூறியதாவது:
உலகளவில் கடல்நீர், 75 சதவீதம், கிளேசியர் எனப்படும், பனிப்படிவங்கள், 22 சதவீதம் உள்ளன. 2.35 சதவீத நீர், பூமிக்கு மிக அதிகளவு ஆழத்தில் உள்ளது. எஞ்சிய, 0.65 சதவீதம் நீர் தான் நமது ஆறு, குளம், குட்டை மற்றும் கிணறுகளில் உள்ளது. இந்த உலகில், 100 லிட்டர் தண்ணீர் இருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் இருந்து நமக்கு கிடைக்கும் நீரின் அளவு, வெறும், 5 சொட்டு தான். இந்த நன்னீரில், 80 சதவீதம் விவசாயம் மற்றும் உணவு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
அன்டார்டிகா, இமயமலை உள்ளிட்ட உலகின் சில பகுதிகளில், மலையடிவாரங்களில் பனிப்படிவங்கள் உருவாகின்றன. இவை தான் நன்னீர் வளத்திற்கான ஆதாரம். எனவே, பனிபடிவங்கள் பாதுகாப்பு என்பதும், நீர் சிக்கனம் என்பதும் மிகவும் அவசியம். நீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதும், பூமியில் உள்ள ஒவ்வொரு சொட்டு நீரும், விலைமதிப்பற்ற உயிர்நீர் என்பதை உணர்த்துவதே, உலக தண்ணீர் தினம். இவ்வாறு, அவர் கூறினார்.
- இன்று உலக தண்ணீர் தினம் -