/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் குழாய் சேதம்; சீரமைப்பு பணி தீவிரம்
/
குடிநீர் குழாய் சேதம்; சீரமைப்பு பணி தீவிரம்
ADDED : ஜூலை 22, 2025 12:15 AM

திருப்பூர்; மங்கலம் ரோடு, போயர் காலனி பகுதியில் ஏற்பட்ட பாதாள சாக்கடை திட்ட குழாய் உடைப்பை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மங்கலம் ரோட்டில் கோழிப்பண்ணை பஸ் ஸ்டாப் உள்ளது. இப்பகுதியில் ரோட்டின் மையப் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்ட பிரதான குழாய் வாயிலாக, சுத்திகரிப்பு மையத்துக்கு கழிவுநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டும், கழிவு நீர் ரோட்டில் பாய்ந்து பெரும் அவதியை ஏற்படுத்தி வந்தது. மேலும், போயர் காலனியில் உள்ள வீடுகளுக்குள்ளும், ரோட்டிலும் கழிவு நீர் சென்று தேங்கி சிரமத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் சுட்டிக்காட்டி செய்தி வெளியானது. இதனால், நேற்றுகாலை அங்கு குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை ஊழியர்கள் மேற்கொண்டனர்.