sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் காட்சிப்பொருளானது!:. ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் அலட்சியம்

/

கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் காட்சிப்பொருளானது!:. ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் அலட்சியம்

கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் காட்சிப்பொருளானது!:. ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் அலட்சியம்

கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் காட்சிப்பொருளானது!:. ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் அலட்சியம்


UPDATED : பிப் 02, 2026 06:46 AM

ADDED : பிப் 02, 2026 05:06 AM

Google News

UPDATED : பிப் 02, 2026 06:46 AM ADDED : பிப் 02, 2026 05:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: கிராமங்களில் பல்வேறு சிறப்புத்திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட, குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் மின் இணைப்பு வழங்காதது மற்றும் ஊராட்சி நிர்வாகங்களின் அலட்சியத்தால் காட்சிப்பொருளாக மாறி, கோடை காலத்தில், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது.

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள, 72 ஊராட்சிகளுக்கு திருமூர்த்தி அணையை ஆதாரமாகக்கொண்ட, கூட்டுக்குநீர் திட்டத்தின் வாயிலாக குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

பல்வேறு காரணங்களால், கூட்டுக்குடிநீர் திட்டத்தில் போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே, உள்ளூர் நீராதாரங்களான, போர்வெல் மற்றும் பொதுக்கிணற்றில் கிடைக்கும் தண்ணீரை, ஊராட்சி நிர்வாகத்தினர் மக்களுக்கு வினியோகிக்கப்பது வழக்கம்.

இவ்வாறு, உள்ளூர் நீராதாரங்களில் பெறப்படும் தண்ணீரின் தரத்தால், சில பாதிப்புகள் ஏற்பட்டதால், குடிநீரை சுத்திகரித்து வினியோகிக்க கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து, சிறப்புத்திட்டத்தின் கீழ், சில ஊராட்சிகளில், எதிர் சவ்வூடு பரவல் முறையில், குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டது. இதற்கான மின் இணைப்பு மற்றும் இதர கட்டமைப்பு வசதிகள், 8 லட்சம் ரூபாயில் மேற்கொள்ளப்பட்டது.

உடுமலை ஒன்றியத்தில், மானுப்பட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக மாறியுள்ளது. இதே போல், குடிமங்கலம் ஒன்றியத்தில், விருகல்பட்டி ஊராட்சியில், பயன்பாட்டுக்கு வராமல், சுத்திகரிப்பு மையம் பயன்பாடு இல்லாமல் வீணாகக்கிடக்கிறது.

இந்த மையத்துக்கு மின் இணைப்பு வழங்கவில்லை; திறப்பு விழாவின் போது பெயரளவுக்கு மையத்தை செயல்படுத்தி விட்டு, காட்சிப்பொருளாக மாற்றி வைத்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக, திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பற்றாக்குறையாக குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது; இதனால், உள்ளூர் நீராதாரங்களை பயன்படுத்த வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

நிலத்தடி நீர்மட்டம் சரிந்து, போர்வெல்களில் தண்ணீர் குறைந்துள்ளதால், தண்ணீரின் தரமும் மாறியுள்ளது. சுத்திகரிப்பு மையங்கள் பயன்பாட்டில் இல்லாததால், தண்ணீரை சுத்திகரிக்காமல், நேரடியாக வினியோகிப்பதால், பல்வேறு பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

மூன்று ஒன்றியங்களிலும் காட்சிப்பொருளாக உள்ள சுத்திகரிப்பு நிலையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

பல லட்ச ரூபாய் அரசு நிதியை வீணடிக்கும் வகையில், செயல்பட்டு வரும், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகத்தினர் மீது திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதுவும் செய்வதில்லை கிராமங்களில் மேல்நிலைத்தொட்டியில் இருந்து குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகிக்கும் முன், முறையான பரிசோதனை செய்வது அவசியம்.

குறிப்பிட்ட இடைவெளியில், இந்த பரிசோதனையை மேற்கொள்ள, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஊராட்சி பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு, களநீர் பரிசோதனை பெட்டியும் வழங்கப்பட்டது.

ஆனால், இந்த பெட்டியை பயன்படுத்தி, எவ்வித பரிசோதனையும் மேற்கொள்வதில்லை. மகளிர் சுய உதவிக்குழுவினர் வாயிலாக இந்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கிராம சபையில் தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இதனால், மழை, கோடை காலத்தில் தரமற்ற குடிநீரால் பல்வேறு பாதிப்புகளை கிராம மக்கள் சந்தித்து வருகின்றனர். ஊராட்சிகளின் இந்த அலட்சிய போக்கு குறித்தும், ஒன்றிய அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us