sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 நடைபாதை ஆக்கிரமிப்பால் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

/

 நடைபாதை ஆக்கிரமிப்பால் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

 நடைபாதை ஆக்கிரமிப்பால் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

 நடைபாதை ஆக்கிரமிப்பால் நெரிசல் பிரச்னைக்கு தீர்வு எப்போது?


ADDED : பிப் 02, 2026 05:07 AM

Google News

ADDED : பிப் 02, 2026 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: நகரப்பகுதி வழியாக செல்லும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளின் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றாததால், நெரிசலும், விபத்துகளும் அதிகரித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

உடுமலை நகரின் மத்தியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நகரை சுற்றிலும் செல்லும் மாநில நெடுஞ்சாலை ரோடுகளில் தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகள் பல ஆண்டுகளாகியும் அகற்றப்படாமல் உள்ளன.

உடுமலை பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், இருபுறங்களிலும் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன், தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடங்கள் அளவீடு செய்யப்பட்டு, எல்லைக்கற்கள் நடப்பட்டன. குறுகிய நாட்களில், ஆக்கிரமிப்பாளர்களால், எல்லைக்கற்கள் மறைக்கப்பட்டது.

பின்னர், சிறப்பு திட்டத்தின் கீழ், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பாதசாரிகளுக்காக நடைபாதை அமைக்கப்பட்டது. இதனால், நெரிசலான பகுதியில் ரோட்டையொட்டி, பாதசாரிகள் நடந்து செல்வதும், விபத்து அபாயமும் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தற்போது நடைபாதை இருப்பதே தெரியாத அளவுக்கு, தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. நடைபாதைக்கும், தேசிய நெடுஞ்சாலைக்கும் இடையிலான பகுதியில், வாகனங்களை நிறுத்தி கொள்கின்றனர்.

இதே போல், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து துவங்கும், பை-பாஸ் ரோடு, ராஜேந்திரா ரோடு, தாராபுரம் ரோடு, பல்லடம் ரோடு ஆகிய ரோடுகளும், நகர போக்குவரத்தில், முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

இந்த ரோடுகளில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், நகரப்பகுதியிலிருந்து புறநகர் பகுதியை எட்டும் வரை வாகனங்கள் திணற வேண்டியுள்ளது.ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், அனைத்து ரோடுகளிலும் 'சென்டர்மீடியன்' வைக்கப்பட்டது நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

புறவழிச்சாலை, மேம்பாலங்கள் என பல்வேறு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினாலும், போக்குவரத்து அதிகமுள்ள ரோடுகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதே, நகரில் நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமையும்.






      Dinamalar
      Follow us