/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., கால்வாயில் நீர் திறப்பு
/
திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., கால்வாயில் நீர் திறப்பு
திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., கால்வாயில் நீர் திறப்பு
திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., கால்வாயில் நீர் திறப்பு
ADDED : ஆக 31, 2025 07:31 PM
உடுமலை; திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் மற்றும் உடுமலை கால்வாயில் இன்று (1ம் தேதி) முதல் நீர் திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்குட்பட்ட, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த, ஜூலை, 27ல் நீர் திறக்கப்பட்டது.135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, மொத்தம், 9,500 மில்லியன் கனஅடி நீர் வழங்க திட்டமிடப்பட்டது.
பருவமழை அதிகரிப்பு, திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு ஆகிய காரணங்களினால், முதல் சுற்றுக்கு பின், இடைவெளியின்றி இரண்டாம் சுற்றுக்கும் நீர் வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரதான கால்வாயில், 73வது கி.மீ., செஞ்சேரிபுத்துார் பகுதியில், கால்வாய் நீர் கசிவு அதிகரித்தது. இதனை பராமரிக்கும் வகையில், கடந்த, 27ம் தேதி, பிரதான கால்வாயில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதோடு, உடுமலை கால்வாயில் நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில், இன்று (1ம் தேதி) முதல், பிரதான கால்வாயில் நீர் திறப்பு அதிகரிக்கப்படும். உடுமலை கால்வாயில் வழக்கம் போல், நீர் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் கூறியதாவது: பிரதான கால்வாயில், ஒவ்வொரு சுற்றுகளின் போதும், சில நாட்கள் தண்ணீர் நிறுத்துவதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.
குறிப்பாக, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு உரம் வைத்த பிறகு, உடனடியாக தண்ணீர் விட வேண்டும். இல்லாவிட்டால், உரம் வீணாகி விடும். ஒவ்வொரு மடையிலும், நீர் நிர்வாகத்திலும் பிரச்னைகள் ஏற்படும்.
பிரதான கால்வாயை முழுமையாக புதுப்பித்தால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும். முறையான அறிவிப்பு இல்லாமல், பிரதான, கிளை கால்வாய்களில் பாசன நீரை நிறுத்தும் நடைமுறையை பொதுப்பணித்துறையினர் கைவிட வேண்டும்.
பாசன நீர் இடைவெளிக்கு ஏற்ப கூடுதல் நாட்கள் திட்டமிட்டு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைத்து நிலைப்பயிர்களும் பாதிக்கும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.