/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! பாசன சபையினர் எதிர்பார்ப்பு
/
குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! பாசன சபையினர் எதிர்பார்ப்பு
குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! பாசன சபையினர் எதிர்பார்ப்பு
குளங்களுக்கு தண்ணீர் கொடுங்க! பாசன சபையினர் எதிர்பார்ப்பு
ADDED : அக் 23, 2024 12:20 AM
உடுமலை : வறண்டுள்ள குளங்களுக்கு பி.ஏ.பி., கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என பொதுப்பணித்துறை தலைமை பொறியாளருக்கு பாசன சபையினர் மனு அனுப்பியுள்ளனர்.
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில், குளங்கள் உள்ளன. போதிய மழை இல்லாததால், இவை தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. வறண்ட இக்குளங்களுக்கு பி.ஏ.பி., கால்வாய் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.
இது குறித்து, ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில், அனுப்பியுள்ள மனு: தொடர் மழையால், பி.ஏ.பி., தொகுப்பு அணைகள் மற்றும் திருமூர்த்தி அணையில் திருப்திகரமான நீர் இருப்பு உள்ளது. ஆயக்கட்டு பகுதியிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
இந்நிலையில், இரண்டாம் மண்டல பாசன பகுதியில், கனமழை பெய்யாத பகுதிகளுக்கு உடனடியாக பாசன நீர் வழங்க வேண்டும்.
மழைப்பொழிவு உள்ள பகுதிகளில், பாசன நீரை சேமிக்கும் வகையில், அனைத்து குளம், குட்டைகளுக்கும், கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் வாயிலாக வழங்க வேண்டும்.
வறண்டுள்ள குளங்களில், பாசன நீரை சேகரிப்பதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, பல ஆயிரம் ஏக்கரில், விவசாயம் பாதுகாக்கப்படும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக, தமிழக அரசும், பொதுப்பணித்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.