/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்'
/
'தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு தர வேண்டும்'
ADDED : ஏப் 07, 2025 05:57 AM
திருப்பூர்; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி அறிக்கை:
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார், தர்பூசணி பழங்களில் ஊசி செலுத்தி கலப்படம் செய்வதாக தெரிவித்த கருத்துகளால், தர்பூசணி விற்பனை பாதிக்கப்பட்டு, விலையும் கிலோவுக்கு 3 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தர்பூசணி விவசாயி ஒவ்வொருவருக்கும், ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தர்பூசணி வாங்கி விற்கும் வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர். போலீசாரால் கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க முடியாதநிலையில், கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் குடும்பங்களுக்கு தமிழக அரசு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது.
விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு, ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் கணக்கிட்டு, அரசு இழப்பீடு வழங்கவேண்டும்.

