/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்பிறை முகூர்த்தம்; துள்ளாத மீன் விற்பனை
/
வளர்பிறை முகூர்த்தம்; துள்ளாத மீன் விற்பனை
ADDED : ஜூன் 09, 2025 12:26 AM
திருப்பூர்; நேற்று, வளர்பிறை முகூர்த்த தினம், ஏரளாமான கோவில்களில் கும்பாபிேஷகம் மற்றும் விசேஷ தினம் என்பதால், மீன் விற்பனை மந்தமாக இருந்தது.
திருப்பூர், தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, கடலோர மாவட்டங்களில் இருந்து, 60 டன் மீன், விற்பனைக்கு வரும். கடந்த வாரம் பள்ளி திறப்பு முதல் இரு நாட்கள், வெளியூர் சென்ற பலரும் திருப்பூர் திரும்பியதால், இறைச்சி, மீன் கடைகளில் மீன் விற்பனை களை கட்டியது. ஆனால், நடப்பு வாரம் நிலைமை மாறியது. நேற்று காலை முதலே வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைவாக இருந்தது. மொத்த வியாபாரிகள், வழக்கத்தை விட குறைந்தளவு மீன்களையே வாங்கிச் சென்றனர். வழக்கமாக மதியத்துக்குள், 50 சதவீத மீன் விற்றுத்தீர்ந்து விடும். நேற்று மாலை 5:00 மணி வரை விற்பனை நடந்தும், பெரும்பாலான கடைகளில் மீன் விற்பனையாகாமல் தேங்கியது.
வைகாசி கடைசி வளர்பிறை முகூர்த்தம்; பிரதோஷம் மற்றும் நாள் சிறப்பு என்பதால், பெரும்பாலான கோவில்களில் கும்பாபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது. இதனால், மார்க்கெட்டுக்கு மீன் வாங்கிச் செல்ல வருவோரின் கூட்டம் குறைவாக இருந்தது. கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் நடப்பு வாரம் விலையும் குறைவு. ஆனால், எதிர்பார்த்த விற்பனை இல்லை. இறைச்சி கடைகளில்ஒரளவு கூட்டமே இருந்தது,' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.