/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து பேசுறோம்'; போக்குவரத்து விதிமீறியோருக்கு 'பறக்கும்' அழைப்பு
/
'போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து பேசுறோம்'; போக்குவரத்து விதிமீறியோருக்கு 'பறக்கும்' அழைப்பு
'போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து பேசுறோம்'; போக்குவரத்து விதிமீறியோருக்கு 'பறக்கும்' அழைப்பு
'போலீஸ் கமிஷனர் ஆபீஸ்ல இருந்து பேசுறோம்'; போக்குவரத்து விதிமீறியோருக்கு 'பறக்கும்' அழைப்பு
ADDED : ஏப் 09, 2025 11:35 PM

திருப்பூர்; திருப்பூரில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து, போலீசார் நோட்டீஸ் மட்டும் கொடுத்து அனுப்பி வந்தனர். ஆனால், சாலை விபத்துகள் தொடர்கதையாக இருந்து வந்தது. விதிமீறல்கள் தொடர்பாக விதிக்கப்படும் அபராதத்தை செலுத்தாமல் நிலுவையில் இருப்பதோடு, தொடர்ந்து அதே நபர்கள் மீண்டும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவது தெரிந்தது.
'ஸ்பாட் பைன்'
போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், போக்குவரத்து விதிமீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் வசூலிக்க ஆரம்பித்தனர். வாகன ஓட்டிகள் தங்கள் தவறை உணர்ந்து மீண்டும், அதனை செய்ய கூடாது என்ற நோக்கில் கடந்த, மூன்று மாதங்களாக 'ஸ்பாட் பைன்' விஷயத்தில் போலீசார் மிகுந்த கெடுபிடி காட்டுகின்றனர். போலீசார் ஆங்காங்கே வாகன தணிக்கை செய்து அபராதம் விதித்து வருகின்றனர். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக பல ஆண்டுகளாக அபராத தொகையை கட்டாமல் நிலுவையில் உள்ளவர்களை கண்டறிந்து, வசூலிக்க திட்டமிட்டனர். நிலுவையில் உள்ள வழக்குகளை பார்த்த போது, ஒவ்வொருவரும், 5 - 10 வழக்கில் அபராதம் செலுத்தாமல் இருப்பது தெரியவந்தது.
அழைப்பு மையம்
விதிமீறலில் வழக்குகளுக்கான அபராத தொகை விதிக்கப்பட்ட நபர்களுக்கு, அபராத தொகையை செலுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல் தளத்தில் போலீஸ் அழைப்பு மையம் ஏற்படுத்தப்பட்டது. அதில் பணியாற்றும் போலீசார் வாகன ஓட்டிகளுக்கு தொடர்பு கொண்டு அபராத தொகையை செலுத்துமாறு கூறுகின்றனர். இதுவரை அபராத செலுத்தாத வாகன ஓட்டிகள் அழைப்பு வந்தவுடன், மூன்று நாட்களுக்குள் நிலுவை தொகையினை செலுத்தி, கோர்ட் நடவடிக்கையை தவிர்க்கும் படி போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
நிலுவையில் உள்ள வாகன ஓட்டியை போலீசார் அழைக்கும் போது, சிலர், ஏமாற்று அழைப்புகள் என்றும் நினைத்து தவிர்த்து விடுகின்றனர். இதுபோன்ற பிரச்னையை போலீசார் எதிர்கொண்டு வருகின்றனர். அபராதத்தை வசூலிப்பதை காட்டிலும், சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிக்கு விதிமீறல் நிலுவை வழக்கு தெரியவும், மீண்டும் அந்த தவறை செய்ய கூடாது என்ற நோக்கில் இந்த முன்னெடுப்பு என்று போலீசார் தெரிவிக்கின்றனர்.