/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்காக மட்டுமே கடை கட்டுகிறோம்! வேளாண் வணிக வரித்துறை தகவல்
/
விவசாயிகளுக்காக மட்டுமே கடை கட்டுகிறோம்! வேளாண் வணிக வரித்துறை தகவல்
விவசாயிகளுக்காக மட்டுமே கடை கட்டுகிறோம்! வேளாண் வணிக வரித்துறை தகவல்
விவசாயிகளுக்காக மட்டுமே கடை கட்டுகிறோம்! வேளாண் வணிக வரித்துறை தகவல்
ADDED : மார் 17, 2024 12:20 AM
திருப்பூர்:ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய வசதியாக கடைகள் கட்டப்படுவதாக வேளாண் வணிகத் துறை தெரிவித்துள்ளது.
பல்லடம் ரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் தற்போது, மாநகராட்சி தினசரி மார்க்கெட் கடைகள் தற்காலிகமாக செயல்படுகிறது. இதற்கு முன்னர் அதன் ஒரு புறத்தில் இயங்கி வந்த பூ மார்க்கெட் கடைகள், அதற்கான புதிய வளாகம் அமைக்கப்பட்ட பின் அங்கிருந்து அகற்றப்பட்டன.
இந்நிலையில், பூ மார்க்கெட் கடைகள் செயல்பட்ட இடத்தில் தற்போது மீண்டும் கடைகள் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
மாநகராட்சி பூ மார்க்கெட் வளாகத்துக்கு போட்டியாக பூக்கடைகள் அமைக்க முயற்சி நடக்கிறது; அதற்கான கடைகள் என தகவல் பரவியது.இது குறித்து விளக்கம் பெற ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்களைத் தொடர்பு கொண்ட போதும் உரிய தகவல் கிடைக்கவில்லை.
இது பற்றி தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. பல்வேறு தரப்புக்கும் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. கட்டுமானப் பணி குறித்த விவரங்கள் கேட்டு தகவல் உரிமைச் சட்டத்தில், நல்லுார் நுகர்வோர் மன்றம் சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வேளாண் வணிகத் துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'வேளாண் விளைபொருள் விற்பனைக்கு கடைகள் கேட்டு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்காக அங்கு தற்போது கடைகள் அமைக்கும் பணி நடக்கிறது. அனைத்து வேளாண் பொருட்களையும் விவசாயிகள் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் விற்பனை செய்யலாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் எண்ணிக்கை, கட்டட மதிப்பீடு, கடைகள் பெறத் தகுதியானோர்,
வழிமுறைகள் உள்ளிட்ட எந்த விவரமும்
அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை

