/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மனம் விரும்பாத செயல் செய்வதை தவிர்க்கலாம்'
/
'மனம் விரும்பாத செயல் செய்வதை தவிர்க்கலாம்'
ADDED : ஜன 08, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவில்,வியாஸராஜர் ராம நாம பஜனை மடத்தில் மகாபாரதம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது.
அதில், ஆன்மிகச் சொற்பொழிவாளர் சென்னை ஜெயமூர்த்தி பேசியதாவது: முன் காலத்தில் செய்த வினைகளும் தானங்களும் தான் நம்முடைய பாவ புண்ணியங்களாக இன்றைய நாட்கணக்கில் சேர்க்கப்படுகிறது. நம் மனம் விரும்பாத எந்த செயலையும் செய்யக்கூடாது. ஏற்கனவே நடந்த செயலை எண்ணி வருத்தப்படக்கூடாது.
அன்பை விதைக்கும் இல்லறம், வரங்களை அரு ளும் கோவிலாக விளங்கும். எந்த ஒரு வேலையையும் கூடி வாழ்ந்து செய்யும்போது பலன் அதிகமாக கிடைக்கும்.

