/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நம்மால் முடியும் நாமே செய்வோம்'
/
'நம்மால் முடியும் நாமே செய்வோம்'
ADDED : ஆக 10, 2025 02:52 AM

திருப்பூர் : 'ஸ்டார்ட் அப் இந்தியா' மற்றும் அமிர்த் கால பரிந்துரை நிபுணர் ஜெய்பிரகாஷ் கூறியதாவது:
கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா அடைந்த முன்னேற்றங்களை அடிப்படையாக கொண்டு, 'அமிர்த் காலம்' எனப்படும் அடுத்த 25 ஆண்டுகளில், 'விக்சித் பாரத்' உருவாக வேண்டியது அவசியம்.
30 டாலர் டிரில்லியன் பொருளாதாரத்தை அடைதல், 100 சதவீத லட்சிய அடையாளம், நவீன சுகாதார வசதிகள், நுாறு சதவீதம் கல்வி, உலகளவில் ஆர் அண்ட் டி மற்றும் கண்டுபிடிப்புகளில் முன்னிலை வகித்தல், எம்.எஸ்.எம்.இ., மற்றும் ஸ்டார்ட் அப்களை உலகளவில் பெரிய அளவுக்கு அழைத்துச் செல்லுதல், சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய நீடித்த வளர்ச்சி, ஸ்டார்ட்-அப் இந் தியாவின் பங்களிப்பு ஆகியன, இத்திட்டம் மூலம், இந்தியாவுக்கு சில முக்கிய இலக்குகளாக உள்ளன.
இந்தியா உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய ஸ்டார்ட் -அப் ஹப் ஆக மாறியுள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமான ஸ்டார்ட்-அப்கள், 100க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள், லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
கிராம மாணவர் கூட ஒரு தொழில்முனைவோராக மாற முடியும். டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, முத்ரா, பி.எம்.இ.ஜி.பி., போன்ற பல வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்கள் உள்ளன.
விக்சித் பாரத்தில் பெண்கள், விவசாயிகள், கிராமங்களில் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். நாம் செய்கிற ஒவ்வொரு சிறிய முயற்சியும், 2047 இந்தியாவை உருவாக்கும் ஒவ்வொரு செங்கல் ஆகும்.
இதுதான் விக்சித் பாரத் — நம்மால் முடியும், நாமே செய்வோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.