/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பதட்டமில்லாமல் தேர்வு எழுத மாணவருக்கு உதவ வேண்டும்!
/
பதட்டமில்லாமல் தேர்வு எழுத மாணவருக்கு உதவ வேண்டும்!
பதட்டமில்லாமல் தேர்வு எழுத மாணவருக்கு உதவ வேண்டும்!
பதட்டமில்லாமல் தேர்வு எழுத மாணவருக்கு உதவ வேண்டும்!
ADDED : மார் 22, 2025 10:57 PM
திருப்பூர்: வரும், 28ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கிறது. மாவட்டத்தில், 30 ஆயிரத்து, 235 மாணவ, மாணவியர் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். 104 தேர்வு மையங்களில் தேர்வு நடக்கவுள்ளது. தேர்வு நடக்கும் மையங்களில் மேற்கொள்ள வேண்டிய பணி, முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று தேர்வு மையங்களில் நடந்தது.
தேர்வறைக்கான பொறுப்பு அலுவலரான முதன்மை கண்காணிப்பாளர், ஒவ்வொரு தேர்வறை கண்காணிப்பாளர், தேர்வு பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் என்னென்ன பணிகளில் ஈடுபட வேண்டும், வினாத்தாள் கட்டுக்களை பிரிப்பது, மாணவர்களுக்கு வழங்குவது, விடைத்தாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என்பது குறித்து தேர்வர்களுக்கு அறிவுரைகளை வழங்குவது.மூன்று மணி நேரத்தில், ஒவ்வொரு மணி நேரத்துக்கு ஒரு மணி அடிக்கும் போதும் தேர்வருக்கு தெரிவிக்க வேண்டும்.
தேர்வு முடிந்த பின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்த விரிவான அறிவுரைகளை வழங்கினர்.
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) காளிமுத்து கூறுகையில்,''பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் தேர்வர்கள், முதல்முறை பொதுத்தேர்வை எதிர்கொள்ள போகிறவர்கள்; எனவே, அவர்களுக்கு தேவையான, முழுமையாக அறிவுறுத்தல்களை அறை கண்காணிப்பாளர்கள் தெரிவிக்க வேண்டுமென முதன்மை கண்காணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளனர். பதட்டமில்லாமல் தேர்வை எதிர்கொள்ள மாணவருக்கு உதவ வேண்டும்,'' என்றார்.