ADDED : ஆக 13, 2025 01:05 AM

தி ருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று கொங்கு வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகிகள் அளித்த மனு குறித்து, அவர்கள் கூறியதாவது:
மாவட்டம் முழுவதும், குறு வியாபாரிகள், மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்கள், முதியோர், சாலையோரங்களில் கடை அமைத்து, வியாபாரம் செய்துவருகின்றனர். மாநகராட்சி நிர்வாகத்துக்கும், போலீசாருக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து, எவ்வித இடையூறுமின்றி வர்த்தகம் செய்து, எங்கள் குடும்பத்தை பாதுகாத்து வருகிறோம்.
சிலர், ரோட்டோர வியாபாரிகளாகிய எங்களை வர்த்தகம் செய்ய விடாமல் இன்னல் கொடுக் கின்றனர். மத்திய, மாநில அரசுகள், சாலையோர வியாபாரிகளுக்கு சிறு தொழில் கடனுதவி வழங்கிவருகிறது. நாங்கள், வங்கி கடன் பெற்று, வர்த்தகம் செய்து, கடன்களை திருப்பிச் செலுத்தி வருகிறோம்.
இந்நிலையில் கடந்த, 6ம் தேதி, சாலையோர வியாபாரிகள் கடையை காலி செய்யவேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
மத்திய, மாநில அரசுகள், சாலையோர வியாபாரிகளை அங்கீகரித்துள்ளன. எனவே, சாலையோர கடைகளை அகற்றுவது தொடர்பான நெடுஞ்சாலைத்துறையின் உத்தரவுகளை, ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.