/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இப்பிறவிக்கு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்': சொற்பொழிவாளர் தேசமங்கையற்கரசி விளக்கம்
/
'இப்பிறவிக்கு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்': சொற்பொழிவாளர் தேசமங்கையற்கரசி விளக்கம்
'இப்பிறவிக்கு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்': சொற்பொழிவாளர் தேசமங்கையற்கரசி விளக்கம்
'இப்பிறவிக்கு மகிழ்ச்சி கொள்ள வேண்டும்': சொற்பொழிவாளர் தேசமங்கையற்கரசி விளக்கம்
ADDED : ஜன 23, 2025 12:28 AM

திருப்பூர்; குலால சமுதாய முன்னேற்றம் சங்கம் சார்பில், ஸ்ரீ திருநீலகண்ட நாயனார் குருபூஜை, 50 வதுஆண்டு பொன் விழா திருப்பூர், தாராபுரம் ரோடு, கரட்டாங்காட்டில் நேற்று நடந்தது.
அதனையொட்டி, நேற்று மாலை நடந்த சொற்பொழிவில், '63 நாயன்மார்களின் திருநீலகண்டர் நாயனார்' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் தேசமங்கையற்கரசி பேசியதாவது:
குறிக்கோள் இல்லாமல் வாழ கூடாது. இதனை ஏற்படுத்தி, நம்மை நல்வழிப்படுத்தும் வகையில் திருவள்ளுவர் முதல் வாரியார் சுவாமி வரை, பல ஞானிகள் நமக்கு அளவில்லா கருத்துகளை அளித்து உள்ளனர். இந்த உலகத்தில், அரிதான பிறவி, மானுட பிறவி தான். இந்த பிறவி கிடைத்ததற்கு சந்தோஷப்பட வேண்டும். ஆனால், யாரும் சந்தோஷப்படுவதில்லை. ஏன் மனிதனாக பிறந்தோம் என்று, என்றாவது ஒரு நாள் நினைக்காமல் யாரும் இருந்து இருக்கமாட்டார்.
இவ்வுலகில் ஆசைப்படாத மனிதர் யாருமில்லை. மண், பொன் ஆசை, மனித பிறவியை தவிர, மற்ற ஜீவராசிகளுக்கு கிடையாது. அதில், எல்லா ஜீவராசிகளுக்கு பொதுவாக இருக்க கூடிய ஆசை, பெண் ஆசை. இந்த ஆசையை முழு மையாக வென்றவர், 63 நாயன்மார்களில் ஒருவர் திருநீலகண்ட நாயனார் தான். தவறு செய்தால், அதனை ஒத்துகொள்ளும் மனப்பான்மை வேண்டும். நாம் செய்யும் எந்த தவறையும் ஏற்கமுன்வருவதில்லை.பக்தியால் சாமி கும்பிட வேண்டும். பயத்தால் சாமி கும்பிட கூடாது.
கடவுளிடம் எதையும் கேட்க வேண்டாம். ஒன்று கிடைப்பது, கிடைக்காமல் போவதற்கு அவர் முடிவு செய்து இருப்பார். நமக்கு கிடைக்காததை நினைத்து, நாம் எண்ண உருண்டு புரண்டாலும் கிடைக்காது. இந்த உடம்பை விட, பெரிய மருத்துவர் கிடையாது. உடம்பு சொல்வதை கேள் என, வள்ளுவர் கூறினார். ஆனால், நாம் கேட்பது கிடையாது. நள்ளிரவு பிரியாணி சாப்பிடுகிறோம். தற்போது, உணவின் மீதான மோகம் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு நாளும், பாலியல் வன்கொடுமை தொடர்பான செய்தியை படிக்கிறோம், கேட்கிறோம். இது மிகவும் வேதனையான ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திலும், ஒரு ஆண் பிள்ளைக்கு சொல்லி தர கூடிய முக்கியமான ஒன்று, தாயை எப்படி நினைக்கிறாயோ, அதேபோல், உன் மனைவியை தவிர, மற்றவர்களை தாயாகவும், சகோதரியாகவும் நினைத்து மதிக்க வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும். ஒழுக்கத்தை பற்றி அதிகம் போதிக்க வேண்டிய சூழலில் தற்போது நாம் உள்ளோம்.
இவ்வாறு, அவர் பேசினார்.

