ADDED : ஜூன் 30, 2025 12:30 AM

தெளிவு பிறந்தது
ஹரிணி, பொன்கோவில் நகர்: நிகழ்ச்சிக்கு வரும் முன், ஓரிரு பாடப்பிரிவு மட்டுமே தெரிந்திருந்தோம். இவ்வளவு பாடப்பிரிவுகள், அவற்றின் உட்பிரிவுகளாக நிறைய உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடிந்தது. கவுன்சிலிங் 'சாய்ஸ் பில்லிங்'கில் உள்ள சந்தேகங்களுக்கு பதில் கிடைத்தது; தெளிவு பிறந்தது.
புதிய தகவல்கள்
பரத்வாஜ், வெள்ளியங்காடு: கவுன்சிலிங்கில் கல்லுாரி தேர்வு செய்யும் போது மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். என்ன காரணத்துக்காக, ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லுாரிகளை தேர்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும். தாமதமின்றி கல்லுாரிக்கு செல்ல வேண்டியதன் அவசியம் என்ன என்ற புதிய தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.
முழுமையான விபரம்
ரித்தீஸ், காட்டுவளவு: இன்ஜினியரிங் என்றாலே சில படிப்புகள் தான் கண்முன் தெரிந்தவையாக இருந்தன. ஆனால், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்புக்குள், 15க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. இவை அனைத்திலும் வேலைவாய்ப்பு உள்ளது. முழுதகவல்களையும் தெரிந்து கொண்டு, படிப்பை தேர்வு செய்ய வேண்டும் என்ற விபரம் அறிந்து கொண்டேன்.
பயனுள்ள நிகழ்ச்சி
கீர்த்தனா, புதிய பஸ் ஸ்டாண்ட்: கவுன்சிலிங், அட்மிஷனில்ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதை அறியாமல், தவறு செய்து விட்டால், மாணவருக்கானஇடம் கிடைக்காமல் வேறொரு மாணவருக்கு சென்று விடும். பாஸ்வேர்டு, ஓ.டி.பி., பகிரக்கூடாது. கல்லுாரி, படிப்பு தேர்வில் ஒரே மனநிலையுடன் முடிவெடுக்க வேண்டும் என்ற புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். நிகழ்ச்சி மிகவும்பயனுள்ளதாக இருந்தது.
பெற்றோர் பேட்டி புரிந்துகொண்டோம்
சுரேஷ்குமார், ஓடக்காடு: ஆன்லைன் கவுன்சிலிங் நடைமுறை எளிமையானது; முழு விபரங்களை பெற்றோர் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துக்கூறினார்கள். இன்ஜினியரிங்கில், 300க்கும் மேற்பட்ட படிப்புகள் உள்ளன. பலரும் வேறு படிப்புகளை தேர்வு செய்வதில்லை. அவற்றுக்கும் வேலை வாய்ப்புகள் உண்டு என்பதை அறிந்து கொள்ள முடிந்தது.
சிறந்த யோசனை
கவிதா, ஆண்டிபாளையம்: முதலில் தேர்வு செய்யும் கல்லுாரி முக்கியம்; அதில் நீங்கள் கேட்கும் பாடப்பிரிவு கிடைக்காவிட்டாலும், உடனே வேறு கல்லுாரிக்கு சென்று தேடாதீர்கள். கல்லுாரி, கட்டாயம் பிளேஸ் மெண்ட் உண்டு என தெரிந்தால், அதே கல்லுாரியில் வேறுபடிப்பை தேர்வு செய்யுங்கள் எனக்கூறியது, சிறந்த யோசனையாக தெரிந்தது.