/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாதப்பூர் சுங்கச்சாவடி அகற்ற வலியுறுத்துவோம்: எம்.பி.,
/
மாதப்பூர் சுங்கச்சாவடி அகற்ற வலியுறுத்துவோம்: எம்.பி.,
மாதப்பூர் சுங்கச்சாவடி அகற்ற வலியுறுத்துவோம்: எம்.பி.,
மாதப்பூர் சுங்கச்சாவடி அகற்ற வலியுறுத்துவோம்: எம்.பி.,
ADDED : மே 18, 2025 11:18 PM

பல்லடம், ; பல்லடம் அருகே, கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மாதப்பூர் பகுதியில், சுங்கச்சாவடி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு, விவசாயிகள் பொதுமக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நேற்று, நாமக்கல் எம்.பி., மாதேஸ்வரன், சுங்கச்சாவடியில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் மனுவை பெற்றுக் கொண்டார்.
அவர் கூறியதாவது:
பொங்கலுார் வட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பல்வேறு தேவைகள், பணிகளுக்காக பல்லடம் அல்லது திருப்பூர் நகரங்களுக்கு செல்கின்றனர். திருப்பூர் சென்றாலும் சுங்கச்சாவடி; பல்லடம் வந்தாலும் ஒரு சுங்கச்சாவடி என, இரண்டினாலும் பாதிக்கப்படுகின்றனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம் பேசி மாதப்பூர் சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தப்படும்.
தமிழக அரசு இந்த சுங்கச்சாவடியை அமைத்த போதும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் தான் சுங்கக்கட்டண வசூல் நடைபெறும் என்பதால், மத்திய அரசிடமும் இது தொடர்பாக வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.