ADDED : மார் 08, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;காங்கயம் அரசு கலை கல்லுாரியில் புதிய வலைதளம் அறிமுக விழா நடந்தது.
கல்லுாரி கருத்தரங்க வளாகத்தில் கல்லுாரிக்கான புதிய அதிகாரப்பூர்வ வலைதளம் துவக்க விழா நடந்தது. இதனை கல்லுாரி முதல்வர் நசீம்ஜான் அறிமுகப்படுத்தினார்.
வலை தளத்தில், கல்லுாரியின் செயல்பாடுகளை மாணவர்களும் பெற்றோரும் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடியும். அந்த பயன்பாட்டுக்காக இந்த வலைதளம் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
விழாவில், கல்லுாரி அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் வலைதள ஒருங்கிணைப்பாளர் தேவகி செய்திருந்தார்.

