/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மார் 18, 2025 04:05 AM

உடுமலை : உடுமலை பத்ரகாளியம்மன் கோவில் திருவிழாவின், முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
உடுமலை பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 4ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 9ம் தேதி கருப்பண்ணசாமி பூஜை நடந்தது. 10ம் தேதி திருமூர்த்திமலையிலிருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர்.
அம்பாளுக்கு தீர்த்தத்தில் புண்ணிய அர்ச்சனை நடந்தது. தொடர்ந்து 11ம் தேதி கோவில் கொடியேற்றத்துடன், காப்புகட்டுதல் மற்றும் முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சிகள், கோலப்போட்டி, மாறுவேடப்போட்டி, விளையாட்டுப்போட்டிகளும் நடந்தன. அன்று மாலையில் கும்பம் எடுத்து வரப்பட்டது. விழாவில் பரதநாட்டியம், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளும் நடந்தன. 15ம் தேதி பக்தர்கள் பூவோடு எடுத்து வந்துவழிப்பட்டனர். முக்கிய நிகழ்வாக, நேற்று காலையில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் திருக்கல்யாணம் நடந்தது. மாலையில், திருமண கோலத்தில் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இன்று மாலையில் கும்பம் விடுதல், முளைப்பாரி விடுதல் நிகழ்வுகள் நடக்கிறது. நாளை, மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பத்ரகாளியம்மனுக்கு மகா அபிேஷகம் மாலையில் நடக்கிறது.