/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருவமழைக்கு பிறகு களையெடுத்தல் தீவிரம்
/
பருவமழைக்கு பிறகு களையெடுத்தல் தீவிரம்
ADDED : ஜன 01, 2025 07:47 AM

உடுமலை: பருவமழைக்குப்பிறகு, கொண்டைக்கடலை சாகுபடியில், களையெடுத்தல் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக்கொண்டு, மானாவாரியாக கொண்டைக்கடலை பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது.
நடப்பு சீசனில் கணபதிபாளையம், பொட்டையம்பாளையம், அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில், இச்சாகுபடியில், செடிகள் வளர்ச்சி தருணத்தில் உள்ளன. மழைக்குப்பிறகு, சாகுபடி விளைநிலங்களில், களையெடுத்தல் பணிகள் தீவிரமாக நடக்கிறது.
விவசாயிகள் கூறுகையில், 'கொண்டைக்கடலை சாகுபடியில், மழைக்கு பிறகு புழுத்தாக்குதலை கட்டுப்படுத்த மருந்து தெளித்துள்ளோம். தற்போது களையெடுத்தல் பணிகள் நடைபெறுகிறது. அறுவடையின் போது நிலையான விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளோம்,' என்றனர்.