/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி கணக்குகளில் வாரிசு நியமனம் நடைமுறை மாற்றத்துக்கு வரவேற்பு
/
வங்கி கணக்குகளில் வாரிசு நியமனம் நடைமுறை மாற்றத்துக்கு வரவேற்பு
வங்கி கணக்குகளில் வாரிசு நியமனம் நடைமுறை மாற்றத்துக்கு வரவேற்பு
வங்கி கணக்குகளில் வாரிசு நியமனம் நடைமுறை மாற்றத்துக்கு வரவேற்பு
ADDED : அக் 30, 2025 11:44 PM
திருப்பூர்:  நாளை (நவ. 1) முதல், வங்கி வைப்புத்தொகை கணக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் இருவேறு வழிமுறைகளின் கீழ் நான்கு 'வாரிசுகள்' வரை தேர்வு செய்ய முடியும்.
ஒரே நேரத்தில் நான்கு பேருக்கும் விகித அடிப்படையில் பங்கு நிர்ணயிக்கும் முறையிலோ அல்லது முன்னுரிமை அடிப்படையில் ஒருவர் பின் ஒருவராக வரிசைப்படுத்தும் முறையிலோ வாரிசுகளை நியமிக்கலாம்; பாதுகாப்பு பெட்டகங்களை பொறுத்தவரை, முன்னுரிமை அடிப்படையில் வரிசைப்படுத்தும் முறையில் மட்டும் வாரிசுகளை நியமிக்க முடியும்.
இதனால், ஒரு டெபாசிட் ஒரு வாரிசு, என்ற நிலை மாறுகிறது.
இதனால், வாடிக்கையாளர்கள் வாரிசுதாரர் நியமனம் எளிமையாவதுடன், வங்கி நடவடிக்கைகளும் எளிதாக உதவுகிறது.
திருப்பூர் மாவட்ட வங்கி பணியாளர்கள் சங்க பொருளாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''வாரிசு நியமன புதிய விதிகளில், வாடிக்கையாளர் தங்கள் சொத்துகள் யாருக்கு (மகன்/மகள்/மனைவி) செல்ல வேண்டும் என்பதை நெகிழ்வாகத் தீர்மானிக்க உதவும்.
பல்வேறு காரணங்களால், பணத்தை எடுக்க முடியாமல், வாடிக்கையாளர்கள் சிரமத்தை சந்தித்து வரும் நிலை மாறும்.
வாரிசுதாரர் நியமனம் நான்காக மாறும் போது, தொகைகளை பிரித்து வழங்கும் போது வங்கிகள் - வாடிக்கையாளர் இடையே பிணக்கு இல்லாத சூழல் உருவாகும்.
இந்த புதிய முறை நியமனத்தில் மாற்றம் வரவேற்கத்தக்கது,'' என்றார்.

