ADDED : ஜூலை 27, 2026 05:49 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்:தாராபுரம்,
காமன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம், 45, வெல்டிங் தொழிலாளி.
தாராபுரம் பைபாஸ் சாலையில் லாரி மீது நின்றபடி நேற்று காலை, 9:00
மணியளவில் வெல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது
எதிர்பாராதவிதமாக மேலே சென்ற மின் கம்பி உரசியதில், துாக்கி
வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, தாராபுரம் அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில்
ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
